
கடந்த 2022-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் 34 புலிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன. இதனால், இந்தியாவில் அதிக புலிகளைக் கொண்டுள்ள மாநிலமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, அதிக புலிகளைக் கொண்ட மாநிலமாக கர்நாடகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு மாநிலங்களுக்கும் இடையில் அதிக புலிகளைக் கொண்ட மாநிலமாக திகழ்வதில் போட்டியாக இருக்கும். இந்த நிலையில், கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் 34 புலிகள் இறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ‘தீ’யாக சதமடித்த சூர்யகுமார்: ஹைலைட்ஸ் விடியோ!
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு 34 புலிகள் இறந்த நிலையில், கர்நாடகத்தில் 15 புலிகள் இறந்துள்ளன. இந்தத் தரவுகள் அதிகாரபூர்வமாக இந்த ஆண்டு நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிக அளவில் புலிகள் இறந்தது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தில் அதிக அளவிலான புலிகள் ஏன் இறக்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது. இருப்பினும், மத்தியப் பிரதேசத்தில் அதிக அளவில் புலிகள் இறப்பது ஏன் என்று புரியவில்லை என்றார்.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசம் 526 புலிகளுடன் இந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ள மாநிலமாக மாறியது. அதனைத் தொடர்ந்து 524 புலிகளுடன் கர்நாடகம் இரண்டாவது இடத்தில் இருந்தது.
தேசிய புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.