
ஏற்கனவே ரூ.22,000 கோடி: புதிதாக ரூ.1,688 கோடி வங்கிக் கடன் மோசடி குறித்து வழக்கு
புது தில்லி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் உரிமையாளர் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் சிலர் மீது ரூ.1,680 கோடி கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, நாட்டிலேயே மிகப்பெரிய தொகையை மோசடி செய்ததாக அதாவது ரூ.22,000 கோடி கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக அகர்வால் மீது கடந்த ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது.
இதையும் படிக்க.. 51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்
தவறான தகவல்களை அளித்து கடன் பெற்று ரூ.1107.62 கோடி நட்டம் ஏற்படுத்தியதாக, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் அதன் தலைமையின் கீழ் செயல்படும் வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சிபிஐ தரப்பிடம் அளித்த எழுத்துப்பூர்வமான புகாரினைத் தொடர்ந்து புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
இந்த நிறுவனம் சார்பில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு கடன் பெற்று அனைத்துவங்கிகளிலும் செய்த மோசடி தொகை ரூ.1688.41 கோடி. கிடைக்கப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.