ஜனவரி 14 முதல் 19 வரை.. வட இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை

வட இந்திய மாநிலங்கள் அடுத்த உறைபனி அலையை சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை
வட இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை
Published on
Updated on
1 min read


புது தில்லி: வட இந்திய மாநிலங்கள் அடுத்த உறைபனி அலையை சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல், வட இந்திய மாநிலங்களில் அடுத்த உறைபனி அலை தாக்கக் கூடும் என்று வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருவோர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனவரி 14 - 19ஆம் தேதி குளிர்நிலை மிகவும் மோசமடையும் என்றும், 16 - 18ஆம் தேதிகளில் உறைபனி அதாவது குறைந்த வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வரும் நவ்தீப் தாஹியா மேலும் கூறுகையில், புகைமூட்டம் இந்த குறைந்த வெப்பநிலைக்கு மிக முக்கியக் காரணியாக அமையும். இதே நிலை தொடர்ந்தால், அதிகபட்ச வெப்பநிலையும் ஒற்றை இலக்க எண்ணுக்குக் குறையும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு இந்த வெப்பநிலையில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பதிவாகக் கூடும் என்றும், மிகவும் ஆச்சரியமான நாள்கள் காத்திருக்கின்றன என்றும் அவர் பதிவிட்டளள்ர்.

வரும் சில நாள்கள் மிகவும் குளிரானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றிலேயே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மிகவும் குளிரான மாதமாக இருக்கலாம்  - ஒரு வேளை, 21ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் குளிரான மாதமாகவும் அமையலாம் - என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com