ஜன. 31 முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜன. 31 முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையிலும் இரண்டாம் அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையிலும் நடைபெற உள்ளது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், '2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை மொத்தமாக 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும். குடியரசுத் தலைவர் உரை, தொடர்ந்து பட்ஜெட் தாக்கல், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பட்ஜெட் அமர்வின் போது, ​​2023 பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறையாக இருக்கும், இந்த நேரத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அமைச்சகங்கள்/ துறைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com