
உக்ரைனில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலி 35 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓராண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபமாக ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இந்த கட்டடத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க | பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஜன. 18) விடுமுறையா? - அமைச்சர் பதில்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...