
குஜராத் கலவரம் குறித்த நேர்காணலில் நரேந்திர மோடி
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டு பிறகு நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆவணப்படம் தொடர்ந்து இணையவெளியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. ஆனந்த் - ராதிகா நிச்சயதார்த்தம்; மணமக்களுக்கு ஆச்சரியம் அளித்த அம்பானி குடும்பம்
இதன் மூலம், பிபிசி தான் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Indian govt has slammed a BBC documentary on Modi, dismissing it as “propaganda,” but BBC is sticking to its guns.
— Prashant Bhushan (@pbhushan1) January 20, 2023
The first episode of the two-part documentary “India:The Modi Question” aired on BBC Two on Jan. 17. Link to doc: https://t.co/bemj5SD69Whttps://t.co/sQKATZMfLK
ஆவணப்படத்தின் இணைப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரசாந்த் பூஷண், மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு நேற்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. இது வெறும் பிரசாரம் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிபிசியோ அதனை நீக்கவில்லை. தொடர்ந்து இணையவெளியில் வைத்திருக்கிறது.
இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம்.. ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' என்று கூறி அதன் இணையமுகவரிகளையும் இணைத்துள்ளார்.
படிக்க | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் பரபரப்பான ஆவணப்படம்!
பிபிசியின் ஆவணப்படம்
''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
படிக்க | பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்... மோடி குறித்த பிபிசி விடியோ!
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், லண்டன் வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா (2001 - 2006), பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதற்காக அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் ஆவணப்படத்துக்கு நேர்காணல் அளித்த இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்களையும், அந்த காலகட்டத்தில் மக்களிடம் அவர் (நரேந்திர மோடி) மேற்கொண்ட பிரசாரங்களையும் தொகுத்து ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் நேற்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், யூடியூபிலிருந்து இந்த விடியோ நீக்கப்படுவதற்கு முன்பு விரைந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Watch quickly before it is taken down from YouTube!
— Prashant Bhushan (@pbhushan1) January 19, 2023
BBC documentary on Modi, particularly on his role in the 2002 ethnic cleansing pogrom in Gujarat https://t.co/m8CzuqgpTb
பிபிசியின் ஆவணப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விடியோவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
யூடியூப்பிலிருந்து நீக்கம்...
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளதாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் தொடர்பான செய்திகள் பரபரப்பைக் கூட்டியிருந்த நிலையில், திடீரென யூடியூபிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சியில், செவ்வாய்க்கிழமை ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி 1) என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. யூடியூபில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த விடியோவை பலரும் தங்களது சமூக வலைதலங்களில் பகிர்ந்தனர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு நிலவியது.
இதற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் எழுந்து வந்த நிலையில், பிபிசியின் ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
யூடியூபிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விடியோவை அனைவரும் விரைந்து பார்க்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், டெரிக் ஓ பிரையன் ஆகியோர் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தனர்.