ஷாருக்கான் என்னிடம் ’பதான்’ குறித்து பேசினார்: அசாம் முதல்வர்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரது பதான் படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான்  என்னிடம் ’பதான்’ குறித்து பேசினார்: அசாம் முதல்வர்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரது பதான் படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ''பேஷாரம் ராங்..'' பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பதான் படத்தை திரையிட எதிர்ப்புகள் எழுந்தன.

பதான் திரைப்பட சர்ச்சைப் பாடலுக்கு எதிரான அசாமின் நரேங்கி பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. பதான் படம் திரையிடப் பட இருந்த திரையரங்குகளின் முன் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். பதான் திரைப்படத்தின் பதாகைகள் கிழிக்கப்பட்டன. மேலும், இந்தப் போராட்டத்தில் படத்தின் போஸ்டர்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரது பதான் படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று (ஜனவரி 22) காலை 2 மணிக்கு என்னைத் தொடர்பு கொண்டார். குவஹாட்டியில் பதான் திரையிடப்பட உள்ள திரையரங்குகள் முன் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்துப் பேசினார். இந்த விஷயத்தில் சட்ட ஒழுங்கினைப் பாதுகாப்பது அசாம் மாநிலத்தின் கடமை என அவருக்கு உறுதியளித்தேன். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பதான் படம் குறித்தும் ஷாருக்கான் குறித்தும் எனக்குத் தெரியாது எனவும், பாலிவுட்டில் இருந்து பலர் என்னைத் தொடர்பு கொண்டு பேசிய போதிலும் ஷாருக்கான் இன்னும் இந்த விவகாரம் குறித்து என்னை அழைத்துப் பேசவில்லை எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com