
தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நடிகையாக பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பின்னர் முக்கியமான நடிகையாக உருமாறியுள்ளார்.
தற்போது அவரிடம் கிட்டதட்ட 10 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அகிலன், பத்து தல, ருத்ரன், டீமாண்டி காலணி 2, கல்யாணும் காமினியும், பொம்மை, இந்தியன் 2, பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றும் இதில் அடங்கும். இதில் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சமீபத்தில் தெலுங்கில் கல்யாணும் காமினியும் படம் விஜய்யின் வாரசுடு படத்தோடு மோதியது குறிப்பிடத்தக்கது. இதில் பிரியாவின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
சமீபத்தில் காதலர் உடன் புகைப்படத்தினை பகிர்ந்து புதிய வீட்டில் குடிபுகுந்ததை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ மூலம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லியாம் டினர் என் புதிய உணவகத்தை தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எங்களது சொந்த உணவகம். இதுதான் எப்போதும் எங்களது கனவாக இருந்தது. இந்த நாளை நெருங்குகையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கிறேன். லியாம் டினர் - விரைவில் சேவை தொடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.