
நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக லாபமில்லை. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைக்கொடுக்கவில்லை.
இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார்.
இதையும் படிக்க: ஜேம்ஸ் கேமரூன் - ராஜமௌலி பேசியது என்ன? விடியோ வெளியானது!
இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. பேய்ப் படங்களுக்கென்று தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அரண்மனை 4 குறித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்திருந்த வேலையில் நேற்று (ஜன.21) சந்தானத்தின் பிறந்தநாளில் சுந்தர் சி, விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர். இதனால் இந்தப் படத்தில் சந்தானம் நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சந்தானம் இனி ஹீரோவாக மட்டும் நடிக்க போவதில்லை. மீண்டும் காமெடியன் அல்லது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!
‘மைக்கேல்’ படப்பிடிப்பு நிறைவு: டிரைலரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்?
ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!
நிறமிழக்கும் அரிய வகை நோயினால் பாதித்த நடிகை!
‘துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்!