ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல்: 413 பக்க அறிக்கை வெளியிட்டது அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல்: 413 பக்க அறிக்கை வெளியிட்டது அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட 413 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல். 
ஹிண்டன்பர்க் ஜன.24-இல் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் மிகப் பெரிய பங்கு வெளியீடுகளில் அதானி குழுமம் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில், இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஹிண்டன்பர்கின் நம்பகத்தன்மை மற்றும் நெறிகள் குறித்து கேள்வியெழுப்புகிறது.
 இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணங்களை ஹிண்டன்பர்க் வெளியிடவில்லை. சுயநலத்தை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, பத்திரங்கள் மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களின் மீறலாகும்.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட 88 கேள்விகளில், 65 கேள்விகளுக்கு உரிய அமைப்புகளிடம் ஏற்கெனவே விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை அளித்துள்ளது. மீதமுள்ள 23 கேள்விகளில், 18 கேள்விகள் பங்குதாரர்கள் மற்றும் அதானி குழுமத்தைச் சாராத நிறுவனங்கள் பற்றியவை. மற்றுமுள்ள 5 கேள்விகள் அடிப்படையற்ற, கற்பனையான தரவுகளைக் கொண்ட குற்றச்சாட்டுகள் என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com