

புது தில்லி: யமுனையில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால், இன்னும் ஒரு சில நாள்களில் புது தில்லியில் இயல்பு நிலை திரும்பலாம்.. மேலும் மழை பெய்யாவிட்டால் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
யமுனையில் வெள்ளப்பெருக்குக் குறைந்தாலும், நகரம் முழுவதும் வெள்ள பாதிப்பு அப்படியேதான் இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியில் கனமழையோ பலத்த மழையோ பெய்யாத நிலைடியில், அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக யமுனையில் ஏற்பட்ட வெள்ளமே, தில்லியில் இந்த அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.
எனவே, மழை காரணமாக வெள்ள பாதிப்பு என்றால் பரவாயில்லை.. அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் வெள்ளம் என்பதை தடுக்க நிச்சயம் தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில்தான், யமுனையில் வெள்ளப்பெருக்குக் குறையத் தொடங்கியிருப்பதாகவும், ஓரிரு நாள்களில் புது தில்லியில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பலாம்.. ஆனால் மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால்தான் என்று என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லிக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.