சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

மணிப்பூர் நிலை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலையில் உள்ளது: அசோக் கெலாட்

மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார்.

Updated On :

மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைதேயி மற்றும் குகி இன மக்களிடையே கடுமையான வன்முறை நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வன்முறைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 19) குகி இனப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் பெண்களுக்கு அரங்கேறிய இந்த பாலியல் ரீதியிலான கொடுமைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு காரணமானவரை காவல் துறை கைது செய்தது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் வன்முறை முடிவில்லாமல் தொடர்வது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.