
மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ நேற்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்றே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், “மே 3-ஆம் தேதி முதல் மணிப்பூரில் நடப்பது குறித்து இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் விவாதங்கள் நடைபெறும். இதுதான் அவையின் முதன்மை அலுவலாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.