
வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2023-ம் ஆண்டில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
டெங்கு பாதித்து 9 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டாக்காவில் உள்ள மருத்துவமனையில் புதிதாக 1,064 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசம் முழுவதும், தலைநகரில் 4,149 பேர் உள்பட மொத்தம் 7,175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தாண்டு இதுவரை 32,977 பேர் டெங்கு பாதித்த நிலையில், 25,626 சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர்.
படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கடந்த 2022-ல் மாநிலத்தில் 281 டெங்கு இறப்புகளும், 2019-ல் 179 இறப்புகளும் பதிவானது. அதேபோன்று கடந்தாண்டு 62,423 பேரில் 61,971 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 20,465 பாதிப்பும், 109 இறப்பும் பதிவானது.
டெங்கு நோய் 2023-ன் மாத வாரியான தரவுகளின்படி, ஜனவரியில் 566 பேர் பாதிப்பும், 6 பேர் பலியும் பதிவானது. பிப்ரவரியில் 111 பாதிப்பும், 2 பேர் உயிரிழந்தனர். மார்ச்சில் 143 பாதிப்பும் 2 பலியும் பதிவானது. ஏப்ரலில் 50 பாதிப்பும் 2 பலியும் பதிவான நிலையில், மே மாதத்தில் 1,036 பதிப்பும் 2 பலியும் பதிவானது. ஜூன் மாதத்தில் மட்டும் 5,956 போதிப்பும், 34 பலியும் பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...