
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆகவும், பாதிப்பு 35,270-ஐ எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியான நிலையில், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 5,956 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் பாதிப்பு 27,292 ஆகப் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, டாக்காவில் 1,238 பேர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,293 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் ஜூலை 24 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 27,622 குணமடைந்துள்ளனர்.
படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல்!
டெங்கு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கதேசத்தில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை சரிபார்க்கவும், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022-ல் மாநிலத்தில் 281 டெங்கு இறப்புகளும், 2019-ல் 179 இறப்புகளும் பதிவானது. அதேபோன்று கடந்தாண்டு 62,423 பேரில் 61,971 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 20,465 பாதிப்பும், 109 இறப்பும் பதிவானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...