உங்களுக்கு என்ன வேண்டும்.. எங்களைக் கேளுங்கள்: மோடிக்கு ராகுல் பதில்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பிரதமர் மோடியின் விமரிசனத்துக்கு பதிலளித்திருக்கும் ராகுல், உங்களுக்கு என்ன வேண்டும், எங்களைக் கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு என்ன வேண்டும்.. எங்களைக் கேளுங்கள்: மோடிக்கு ராகுல் பதில்
Updated on
1 min read

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பிரதமர் மோடியின் விமரிசனத்துக்கு பதிலளித்திருக்கும் ராகுல், உங்களுக்கு என்ன வேண்டும், எங்களைக் கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை உருவாக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணிக் கட்சியை கடுமையாக விமரிசித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி (இந்தியா) போன்று, நாட்டில் இதுவரை ஒரு திசையற்ற கூட்டணியைப் பார்த்ததே இல்லை, மேலும் இந்தப் பெயரானது கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன் போன்ற பெயர்களைப் போன்று தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற பெயரைக் கொண்டு, நாட்டு மக்களை ஒருபோதும் திசைதிருப்ப முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டிவிட்டர் பக்கம் மூலம் பதிலளித்திருக்கும் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, உங்களுக்கு என்ன வேண்டுமோ எங்களிடம் கேளுங்கள். 

நாங்கள் இந்தியா.

மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை சீரடைய உதவுவோம் மற்றும் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களின் கண்ணீரைத் துடைப்போம். அவர்களை மீண்டும் அன்பு மற்றும் அமைதிப் பாதையில் திருப்புவோம்.

மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் கடும் விமர்சனத்துக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார். கூட்டணிக் கட்சியை விமரிசிப்பதற்கு பதிலாக, மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com