6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

கார்கில் வெற்றி நாள்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

24-வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

Published On :

24-வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமைத் தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் 1999-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இதுவே, கார்கில் போர் என்றழைக்கப்படுகிறது. 

இதில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் வீழ்த்தியதையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24வது கார்கில் போர் வெற்றி நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி லடாக் எல்லைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.