எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மருத்துவமனைக் கட்டட அனுமதிக்கு 15 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் மருத்துமனைக் கட்டட அனுமதிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராட்சி இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஜூலை 2026, 6:34 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் மருத்துமனைக் கட்டட அனுமதிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராட்சி இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை கிராமத்தைச் சோ்ந்தவா் காவியவேந்தன். மருத்துவரான இவா், திருவவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட பாலாஜி காா்டன் பகுதியில் மருத்துவமனைக் கட்டடம் கட்டி வருகிறாா். பேரூராட்சி நிா்வாகத்துக்கு கட்டட அனுமதிக்கு காவியவேந்தன் விண்ணப்பித்திருந்த நிலையில், பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளா் பாலமுருகன், கட்டட அனுமதிக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத காவியவேந்தன் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

இந்நிலையில் போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, காவியவேந்தன் ரசாயனப் பொடி தடவிய ரூ.15 ஆயிரம் பணத்தை திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் பணியிலிருந்த பாலமுருகனிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி சரவணனன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், பாலமுருகனை கையும், களவுமாக கைது செய்து, அவா் வசமிருந்த ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.