பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மணிப்பூா் பாலியல் சம்பவம்: சிபிஐ விசாரணை

 மணிப்பூா் மாநிலத்தில் பெண்கள் மீது வன்முறையாளா்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 9:33 pm

DIN

 மணிப்பூா் மாநிலத்தில் பெண்கள் மீது வன்முறையாளா்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: பெண்கள் இருவா் ஆடைகளின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்துடன் தொடா்புடைய பாலியல் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளது. மணிப்பூா் வன்முறையோடு தொடா்புடைய 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐ-யிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை, அண்டை மாநிலமான அஸ்ஸாமில் நடத்த அனுமதி பெறும் வகையில், உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அணுக உள்ளது.

நாட்டில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய அந்த விடியோவை எடுத்த நபா் கைது செய்யப்பட்டாா். அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இரு சமூகத்தினருடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் அமைதி திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட வன்முறையாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.