மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் நாளை பேரணி

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் நாளை மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த உள்ளனர்.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் நாளை மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த உள்ளனர்.  

இந்த பேரணியானது ‘சின்-குகி’ போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிராக தயு மைதானத்தில் தொடங்கி, பல்வேறு பகுதிகள் வழியாக ஹப்டா கங்ஜெய்பங்கில் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது. 

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் சுமார் 10ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பல்வேறு குக்கி-சோ அமைப்புகள் சுராசந்த்பூரில் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் தற்போது மைதேயி சமூகத்தினரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடா்பாக உண்டான மோதல் வன்முறையாக மாறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு அசாம்பவித சம்பவங்களில் தற்போதுவரை 160-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த மே மாதம் நடந்த சம்பவத்தில் பழங்குடி பெண்களை ஆடைகள் ஏதுமின்றி மைதேயி சமூக ஆண்கள் இழுத்துச் செல்லும் விடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தின் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும், மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், விவாதத்தில் பங்கேற்று பிரதமா் விளக்கமளிக்கவும் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com