பார்ட்டி செலவை யார் கொடுப்பது? தகராறில் பிறந்தநாள் கொண்டாடியவர் கொலை

பார்ட்டி செலவை யார் கொடுப்பது? தகராறில் பிறந்தநாள் கொண்டாடியவர் கொலை

பிறந்தநாள் பார்ட்டியில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கலில் பிறந்தநாள் கொண்டாடியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மும்பை: பிறந்தநாள் பார்ட்டியில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கலில் பிறந்தநாள் கொண்டாடியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த மே 31ஆம் தேதி 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுக்கு 4 பேருக்கு ஒரு உணவகத்தில் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டிக்கு ரூ.10,000 செலவாகியுள்ளது. நண்பர்களுடனான பேச்சுவார்த்தையில், செலவுக்கான பணத்தை பின்னர் பகிர்ந்து கொள்வதாக உறுதி தெரிவித்ததால் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் முழு பணத்தையும் செலுத்தியுள்ளார்.

பின்னர், நண்பர்களிடம் பணம் கேட்டபோது தர மறுத்ததுடன் இளைஞரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து நண்பர்களுக்கும் இளைஞருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞரை இரவு 8 மணியவில் கூட்டிச் சென்ற 4 நண்பர்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,

இது குறித்து தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். விசாரணையில் நண்பர்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்தவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கு குறைவானர்கள். அவர்களை உடனடியாக கைது செய்துவிட்டோம். குஜராத்துக்கு தப்பிய மீதி 2 பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com