எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் 2024-க்கு பிறகு தேர்தல் இல்லாமல் போகலாம்: ஆம் ஆத்மி

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் அடுத்து நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் 2024-க்கு பிறகு தேர்தல் இல்லாமல் போகலாம்: ஆம் ஆத்மி
Updated on
1 min read

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் அடுத்து நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் பேசியதாவது: வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் இந்திய அரசியலமைப்பை மாற்ற வாய்ப்புள்ளது. அவர் அரசியலமைப்பை மாற்றி தான் உயிருடன் இருக்கும் வரை நாட்டினுடைய அரசன் நான் என கூற வாய்ப்புள்ளது. தற்போது உள்ள மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் அடுத்த முறை நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம்.

பாஜக எதிர்க்கட்சிகளை நசுக்கி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும்  வருமானவரித் துறையைப் பயன்படுத்தி சிறையில் அடைத்து வருகிறது. ஒருவேளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரால், அவர் அரசியலைப்பை மாற்றி தான் உயிருடன் இருக்கும் வரை நாட்டின் அரசராக இருப்பேன் என மாற்றி விடுவார். அத்துடன் நாட்டின் விடுதலைக்காக பலர் தங்களது இன்னுயிரை இழந்ததெல்லாம் தொலைந்துவிடும் என்றார்.

இவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தில்லியின் பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, இது ஒரு முட்டாள்தனாமான குற்றச்சாட்டு என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com