இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

பபிதா போகத் எங்களது போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கிறார்: சாக்‌ஷி மாலிக்

 பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சி.

Sakshi_Malik

Published On :

 பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்‌ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை பபிதா போகத் வலுவிழக்க செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சாக்‌ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன் இது தொடர்பாக நேற்று (ஜூன் 17) ட்விட்டரில் விடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த விடியோவில் சாக்‌ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன், மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆரம்பத்தில் கடிதம் எழுதியதே பாஜகவைச் சேர்ந்தவர்களான பபிதா போகத் மற்றும் தீரத் ராணா ஆகியோர் எனக் குறிப்பிட்டனர். அதன்பின் இந்த போராட்டம் அரசியல் கட்சியினரால் பயன்படுத்திக் கொள்ளப்படக் கூடாது எனவும் அவர்கள் அறிவுரை கூறியதாகவும் அவர்கள் கூறினர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தையும் சாக்‌ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் காட்டினர். 

இந்த நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்‌ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தீரத் ராணா மற்றும் பபிதா போகத் ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்களை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சி செய்தது எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மல்யுத்த வீரர்கள் தற்போது பிரச்னையில் இருக்கிறோம். நாங்கள் கண்டிப்பாக பிரச்னையில் இருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் படைத்தவர்களால் நடத்தப்படும் கேலிக்கூத்துகளை நினைத்து சிரிக்க கூட முடியவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.