நியூ யார்க்: நான் மோடியின் ரசிகன் என்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளாா்.
இதனிடையே, விண்வெளி விஞ்ஞானியும் எழுத்தாளருமான நீல் டிகிராஸ் டைசன், நோபல் விருதாளரும் பொருளாதார நிபுணருமான பால் ரோமா், எழுத்தாளா் நிக்கோலஸ் நாசிம் தலீப், முதலீட்டாளா் ரே டேலியோ, ஃபலு ஷா, ஜெஃப் ஸ்மித், மைக்கேல் ஃபுரோமேன், டேனியல் ரசல், எல்பிரிட்ஜ் கோல்பி, பீட்டா் ஆக்ரே, ஸ்டீபன் கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன் உள்ளிட்டோரை பிரதமா் மோடி இன்று காலை சந்தித்து உரையாடினார்.
முக்கியமாக, தொழிலதிபரும் ட்விட்டா் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்கை பிரதமா் மோடி சந்தித்தார்.
அப்போது எலான் மஸ்க் பேசியது:
“பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நன்மைக்கு தேவையானவற்றை செய்ய விரும்புகிறார். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார். புதிய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் மோடி, அந்நிறுவனம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதை உறுதிசெய்கிறார்.
பிற நாடுகளைவிட இந்தியா நிறைய வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அவருடனான சந்திப்பு மிகவும் அருமையானது. நான் மோடியின் ரசிகன்.

நான் அடுத்தாண்டு இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்க் இணையதள சேவையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இந்த இணைய சேவை இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு நம்பமுடியாத அளவுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"எங்களை வைத்துதான் கூடுதல் சீட்! ஜெயக்குமார் TVK வரலாம்" செங்கோட்டையன் பேட்டி

5-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்..! டிரம்ப் புகழாரம்!

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

