உத்தரப்பிரதேச கொலையில் திருப்பம்: புதுமணத் தம்பதி பலியான சோகம்

5 பேரைக் கொன்ற இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், புதிதாக திருமணமானவர்களும் பலியானது தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச கொலையில் திருப்பம்: புதுமணத் தம்பதி பலியான சோகம்
Updated on
1 min read

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொன்ற இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், புதிதாக திருமணமானவர்களும் பலியானது தெரிய வந்துள்ளது.

21 வயதே ஆன சோனு யாதவ், அவரது மனைவி சோனி(20) இருவருக்கும் நேற்றுதான் திருமணமான நிலையில், அவர்களுடன் மைத்துனர் மற்றும் நண்பர் என ஐந்து பேர் இன்று அதிகாலை உறக்கத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையில் ஈடுபட்ட ஷிவ் வீர் யாதவ் (28) சோனு யாதவின் சகோதரர் என்பதும், 5 பேரைக் கொலை செய்த அவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஷிவ் வீர் யாதவ் நடத்திய கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த இவரது மனைவி உள்ளிட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷிவ் வீரின் சகோதரர்கள், ஒரு சகோதரரின் மனைவி, மைத்துனர் உள்பட 5 பேர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த கொலை மற்றும் தற்கொலையால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com