கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கலால் கொள்கை: மேலும் ஒரு தொழிலதிபர் கைது!

தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மதுபான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :2 மார்ச் 2023, 6:48 am

DIN

தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மதுபான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிண்ட்கோ சேல்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மதுபான தொழிலதிபர் அமந்தீப் தாலை அமலாக்கத்துறை(இடி) இன்று கைது செய்தனர். 

விசாரணையைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தில்(பிஎம்எல்ஏ) விதிகளில் கீழ் தால் புதன்கிழமை இரவு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமையான இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது. 

முன்னதாக, கலால் முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர், மனோஜ் ராய், அமந்தீப் தால் மற்றும் சமீர் மஹந்த்ரு ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதுவரை, அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து தால் உள்பட மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.