தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிப். 26 ஆம் தேதி கைது செய்தது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இன்றும் தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 20 வரை மணீஷ் சிசோடியாவுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப் பரிசோதனையின்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் கீதை புத்தகம், ஒரு பேனா, ஒரு டைரி, கண் கண்ணாடி ஆகியவற்றை சிறைக்குள் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தன்னை தியான அறையில் வைக்க வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.