ஜோஷிமட்டையடுத்து நிலச்சரிவால் அதிகம் பாதிக்கும் மாவட்டங்கள் இவைதான்: இஸ்ரோ!

ஜோஷிமட் நகரையடுத்து நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள இரு மாவட்டங்கள் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
ஜோஷிமட்டையடுத்து நிலச்சரிவால் அதிகம் பாதிக்கும் மாவட்டங்கள் இவைதான்:  இஸ்ரோ!

ஜோஷிமட் நகரையடுத்து நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள இரு மாவட்டங்கள் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த நகரமுமே புதைபடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சாமோலி மற்றும் ருத்ரபிரயாக் ஆகிய மாவட்டங்களும் நிலச்சரிவில் புதைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு அபாயங்களை அறிக்கை பகுப்பாய்வு செய்துவருகிறது. நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட 147 மாவட்டங்களில் உத்தரகண்ட்டின் 13 மாவட்டங்களும் அடங்கும். அவற்றுள், நிலச்சரிவு அபாயத்தில் நாட்டிலேயே சமோலி 19வது இடத்தில் உள்ளது. நாட்டில் நிலச்சரிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் அடிப்படையில் உள்ள 10 மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் தெஹ்ரி, ருத்ரபிரயாக் உள்ளது. 

சமோலி மாவட்டத்தின் ஜோஷிமட் நகரம் ஏற்கனவே நிலச்சரிவின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த நகரத்தை மக்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பில்லாத நிலச்சரிவு-புதைவு மண்டலமாக மாநில அரசு அறிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதையடுத்து, நாட்டிலேயே அதிக நிலச்சரிவு அடர்த்தி உள்ள மாவட்டம் ருத்ரபிரயாக், அதாவது இந்த மாவட்டம் நிலச்சரிவுகளால் சமூக மற்றும் பொருளாதார சேதத்திற்கு மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும், தெஹ்ரி மாவட்டத்திலும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் புவியியல் ரீதியாக மற்ற மாவட்டங்களை விட சிறியவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

என்ஆர்எஸ்சி அறிக்கையின் படி, இமாச்சலப் பிரதேசத்தில் 12மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் உணர்திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள 147 மாவட்டங்களில் இந்த 11 மாவட்டங்களும் உள்ளன. 
இமாச்சலில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மண்டி மாவட்டம் நாட்டிலேயே 16வது இடத்தில் உள்ளது. 

ஹமிர்பூர் 25வது இடத்திலும், பிலாஸ்பூர் 30வது, சம்பா 32வது, சோலன் 37வது, கின்னார் 46வது, குலு 57வது, சிம்லா 61வது, உனா 70வது, சிரோமர் 88வது, லஹௌல் ஸ்பிட்டி 126வது இடத்திலும் உள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் 14 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாய உணர்திறன் மாவட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிக்கை கூறுகிறது. அவற்றில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரஜோரி நாட்டிலேயே நான்காவது இடத்திலும், பூஞ்ச்  ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com