
கோவாவில் கடும் வெப்பச்சலனம் நிலவிவருவதையடுத்து இரண்டு நாள்களுக்கு பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும் எனக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலக் கல்வி இயக்குநர் ஷைலேஷ் சினார் வெளியிட்ட சுற்றறிக்கையில்,
வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்துவருகின்றது. மார்ச் 8(புதன்கிழமை) தலைநகரில் பகல் நேர வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
மார்ச் 11 ம் தேதி முதல் வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.
இரண்டு நாள்கள் வெப்பச்சலனம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி இன்றும், நாளையும் பள்ளிகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.