பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

’1500 படங்களுக்கு இசையமைத்த பின் இதைச் சொல்கிறேன்..’: இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் குறித்து இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 மார்ச் 2023, 7:32 am

DIN

இயக்குநர் வெற்றிமாறன் குறித்து இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின்  முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா ‘வெற்றிமாறன் திரையுலகின்  முக்கியமான இயக்குநர். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வேறுவேறானவை. அதில் எனக்கு பெரிய சந்தோஷம். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்,  வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.