மீண்டும் அதிகரித்துவருகிறதா கரோனா? 1000ஐ நெருங்கும் பாதிப்பு!

நாட்டில் 126 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 800ஐத் தாண்டியுள்ளது. 
மீண்டும் அதிகரித்துவருகிறதா கரோனா? 1000ஐ நெருங்கும் பாதிப்பு!

புது தில்லி: நாட்டில் 126 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 800ஐத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 843 ஆக உயர்ந்துள்ளது. 

முன்னதாக மார்ச் 3-ம் தேதி 300ஐத் தாண்டிய நிலையில், 126 நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சப்தமில்லாமல் அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,46,94,349 ஆக உள்ளது. 

மகாராஷ்டிராவில் 2 பேரும், கேரளத்தில் இருவரும் என ஒரே நாளில் 4 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 0.01 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதிப்பில் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,389 ஆக உள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.64 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com