ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு- காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு- காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது, 

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் பாதுகாப்பு கருதி ரஜோரி மாவட்டத்தில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com