தில்லியில் இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மீட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் லக்பத் சிங்(43), சுரேஷ்(24), பிரகாஷ் பூரி(39) இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரகண்டைச் சேர்ந்த தால் சந்த் (36), அசாமின் தஸ்லிமா பேகம் (38) மற்றும் தில்லியைச் சேர்ந்த ரவி பிரகாஷ்(34) என்று கண்டறிந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் ரூ.85 கோடிக்கு மேல் மதிப்புள்ள 101.62 கிலோ அபின் மற்றும் 2 கிலோ ஹெராயின், ரூ.7.5 லட்சம் ஹவாலா பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.