கர்நாடகத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுகிறார்கள்: பிரதமர் மோடி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுகிறார்கள்: பிரதமர் மோடி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் அவருக்கு வழிநெடுகிலும் அளித்த உற்சாக வரவேற்பு அவரை இவ்வாறு நினைக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெங்களூருவில் மக்கள் காட்டும் அன்பு போன்று இதற்கு முன் நான் பார்த்ததில்லை. இன்று (மே 6) காலை பெங்களூருவில் சாலை வழிநெடுகிலும் மக்கள் எனக்கு வரவேற்பு அளித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு முன்  ஒருபோதும் நான் பார்த்திராத அளவுக்கு அவர்கள் என் மீது அன்பும், பாசமும் காட்டினார்கள். நான் பயணம் செய்த 25 கிலோமீட்டர் தூரமும் சாலைகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தார்கள். மக்கள் அவர்கள் குடும்பத்துடனும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் அவர்களது குழந்தைகளுடன் வழிநெடுகிலும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நான் பெங்களூருவில் என்ன பார்த்தேன் என்றால், கர்நாடகத் தேர்தலில் மோடியோ, பாஜக தலைவர்களோ அல்லது எங்களது வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள்தான் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் முழு பொறுப்பும் மக்கள் கையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். காங்கிரஸ் 85 சதவிகித கமிஷன் பெறும் கட்சி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது. காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com