கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இம்ரான் கான் கைது: இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :9 மே 2023, 11:45 am

DIN


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணைக்கு ஆஜரான இம்ரான் கானை நீதிமன்றத்திற்குள் நுழைந்து ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் வலுகட்டாயமாக கைது செய்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், கைது நடவடிக்கையின் போது அவரது வழக்குரைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இம்ரான் கானின் ஆதரவாளர்களின் போராட்டத்தைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.