காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூரு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 10.45 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 117, பாஜக-73, மஜத -29, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூரு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கட்சியின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து வர கட்சி திட்டமிட்டுள்ளது.
நாளை பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

