
ஜொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும்(Cash on Delivery) வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ(Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போா், செப்.30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
மே 19-ஆம் தேதியிலிருந்து இதுவரை பணமாக செலுத்தும் வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளனர்.
செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம்.
since friday, 72% of our cash on delivery orders were paid in ₹2000 notes pic.twitter.com/jO6a4F2iI7
— zomato (@zomato) May 22, 2023
சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.
வாடிக்கையாளா் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கணக்கு இல்லாமலும் ரூ.20,000 வரையில் மாற்றலாம்.
பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும்!
அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.