
தில்லி அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தீர்மானம் கொண்டுவந்ததற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சிகளை நேரில் சென்று சந்தித்து வருகிறார். அந்தவகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சென்று சந்தித்தார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் இருந்தனர்.
அந்த சந்திப்பின் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.
தில்லி தேசிய தலைநகா்ப் பகுதியில் அதிகாரிகளை நிா்வகிக்கும் அதிகாரம் யூனியன் பிரதேச அரசுக்கே உள்ளது என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
நாட்டின் பெயரையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மத்திய அரசு மாற்றிவிடுமோ என அச்சமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...