புதிய நாடாளுமன்றக் கட்டடம் - புகைப்படங்கள்!
தில்லியில் நாளை(மே 28) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார்.

இதையொட்டி, புதிய நாடாளுமன்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
_.jpeg)
முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
_.jpeg)
திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
_.jpeg)
இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

ஆனால் இந்த நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
_.jpeg)
புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதினம் அளித்த செங்கோல் நிறுவப்படுகிறது.

இதையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பலரும் தில்லிக்கு சென்று திறப்பு கலந்துகொள்கின்றனர்.

_.jpeg)

_.jpeg)
_.jpeg)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...