தெலங்கானா மாநில போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ப.சிதம்பரம் வருத்தம்!

தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெலுங்கானா மாநிலம் அமைப்பதை தாமதப்படுத்தியதால் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாக கூறிய முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது பிரிப்பது என்பது குழந்தை விளையாட்டு அல்ல. பெரும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

அதற்கான மக்கள் போராட்டத்தில் சிலர் உயிரிழந்தார்கள். அப்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பொறுப்பாக்க முடியாது.

போராட்டத்தின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பெனில், கே.சந்திரசேகர ராவ் ஆட்சியின் கீழ் 4,000 தற்கொலைகள் தெலங்கானாவில் பதிவாகியுள்ளன. இந்த 4,000 பேரின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பாவார்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து பாரத ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரான ராமராவ் கூறியதாவது, “சிதம்பரத்தின் வருத்தம் மிகவும் தாமதமானது. 1952 ஆம் ஆண்டு முதல் 2014 வரையில் நடந்த போராட்டங்களில் தெலங்கானா இளைஞர்கள் உயிரிழந்ததற்கு உங்களின் காங்கிரஸ் கட்சி மட்டுமே பொறுப்பாகும். 

காங்கிரஸ் அரசு எவ்வளவு கொடூரமாக போராட்டங்களை ஒடுக்கியது என்பதை தெலங்கானா மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் இப்போது எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் அதனை மாற்ற முடியாது.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com