ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு!

ராஜஸ்தானில் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு!

ராஜஸ்தானில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காளிசிந்த் அணையின் பேரில் ரூ.250 கோடி உழல் நடந்துள்ளது. இதற்கு முன்பு ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்துத்துள்ளது. 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே நம்பியுள்ள மக்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை. முழு ராஜஸ்தானையும் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்-ஆக மாற்றி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com