பாலஸ்தீன மக்களுக்கு 2-ம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே நடைபெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அனுப்பி வைத்தது.
பாலஸ்தீன மக்களுக்கு 2-ம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே நடைபெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அனுப்பி வைத்தது.

கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ளது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே நடைபெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 32 டன்நிவாரணப் பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அனுப்பி வைத்தது. உத்திர பிரதசத்திலிருந்து இந்திய விமானப் படையைச் சோ்ந்த சி-17 என்ற போக்குவரத்து விமானம் மூலம் இந்தப் பொருள்கள் எகிப்தின் எல்-அரிஷ் விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம. இந்திய விமானப் படையின் சி.17 விமானம் 32 டன் நிவாரணப் பொருட்களை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்றது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, பாலஸ்தீன மக்களுக்கு 6.5 டன் மருத்துவ உதவிப் பொருள்களையும், 32 டன் பேரிடா் நிவாரணப் பொருள்களையும் இந்தியா அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com