
உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். 10வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிக்கிய தொழிலாளர்களை தொடர்புகொள்ள எண்டோஸ்கோபி கேமரா சாதனம் தில்லியில் இருந்து கொண்டுவரப்பட்டு புதிய குழாயில் செலுத்தப்பட்டது. அந்த கேமரா சிக்கிய தொழிலாளர்களின் இடத்தை சென்றடைந்தது.
மீட்புக் குழுவினர், தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் விடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது. தொழிலாளர்கள் நலமாக இருப்பதை எண்டோஸ்கோபி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், மீட்புக் குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் விடியோ தற்போது வைரலாகியுள்ளது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023
இதையும் படிக்க: உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து: மீட்பு முயற்சியில் முன்னேற்றம்
சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உலா் பழங்கள், சத்து மாத்திரைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவை சிறிய குழாய் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாயைச் செலுத்தும் பணி திங்கள்கிழமை நிறைவடைந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...