முதல்வர் இல்லம் அம்பேத்கர் பிரஜா பவன் என மாற்றப்படும்: ரேவந்த் ரெட்டி பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் இல்லத்தின் பெயர் மாற்றப்பட்டு 24 மணி நேரமும் பொதுமக்கள் வந்துபோகும் இடமாக மாற்றப்படும் என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
முதல்வர் இல்லம் அம்பேத்கர் பிரஜா பவன் என மாற்றப்படும்: ரேவந்த் ரெட்டி பேச்சு
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் இல்லமான பிரகதி பவனின் பெயர் அம்பேத்கர் பிரஜா பவன் என்று பெயர் மாற்றப்படும் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். 

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர்  30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் மும்முனை போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

அந்தவகையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலங்கான முதல்வர் இல்லமான பிரகதி பவனின் பெயர் அம்பேத்கர் பிரஜா பவன் என்று மாற்றப்படும். மேலும், அதன் நுழைவாயிற்கதவுகள் அகற்றப்பட்டு 24x7 என எல்லா நேரமும் பொதுமக்களின் வருகைக்காக திறந்திருக்கும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கு வந்து தங்களின் குறைகளைக் கூறி தீர்வுகள் பெற்றுச் செல்லலாம் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை அறிவித்தார். 

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனானது தெலங்கானா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் பணியிடம் ஆகும். 

இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளைக் கைப்பற்றிய சந்திரசேகர ராவின் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 

நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.