அயோத்தி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி மற்றும் ராமர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.
ஹெலிப்காப்டர் மூலம் ராம் கதா பார்க் வந்த முதல்வர் ஆதித்யநாத் ஹனுமான் கர்ஹிக்கு சென்ற சாமி தரிசனம் செய்த பிறகு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார். இதனையடுத்து நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக இருக்குமாறு அங்கிருந்து வாழ்த்தினார். அதே நேரத்தில், ராமர் கோயில் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
நவம்பர் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது தனது அமைச்சர்களுடன் இரு கோயில்களையும் பார்வையிட்டார். பிறகு 12ஆம் தேதி அங்கு நடைபெற்ற 'தீபோத்சவ்' நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ஆதித்யநாத் ராமர் மற்றும் ஹனுமான் கர்ஹியில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


