தெலங்கானத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பிஆா்எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் இத்தோ்தலில் முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலங்கானாவிலும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



