
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தில் மின்னல் பாய்ந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாராயன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரில் இருந்து இந்த கிராமம் 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நாராயன்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: மின்னல் பாய்ந்ததில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும், ஒன்றரை வயது மற்றும் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




