

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புது தில்லி காவல்துறையின் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட தலைமைக் காவலர் பல்விந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 30ஆம் தேதி மகேந்திரா பார்க் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சாலை என பொய் சொன்ன ஜிபிஎஸ்: ஆற்றில் மூழ்கி பலியான மருத்துவர்கள்
இது குறித்து தகவல் அளித்த தில்லி காவல்துறையினர், புகார்தாரரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், அவர் தன்னை மகேந்திரா பார்க் ஸ்டேஷன் பகுதிக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும், அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் தில்லி காவல்துறையின் பட்டாலியனில் நியமிக்கப்பட்டவர். தற்போது, மகேந்திரா பார்க் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.