

ஜெய்ப்பூரில் மாணவிகளிடம் பேசியபோது, திருமணம் செய்துகொள்ளாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களைச் சந்திக்கும் பாரத் ஜோடா யாத்திரையின்போது, பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து உரையாடினார்.
இதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரி மாணவிகளிடம் அவர் பேசிய காணொலி தற்போது ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
இந்தக் காணொலியில் “ஏன் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை?” என்கிற கேள்விக்குப் பதிலளிக்கும் ராகுல் காந்தி, “ஏனெனில் நான் முழுமையாக வேலைகளிலும் காங்கிரஸ் கட்சியிலும் மாட்டிக்கொண்டேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.
இதையும் படிக்க: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் காவல் நீட்டிப்பு!
53 வயதான ராகுல் காந்தியிடம் அவருக்கு பிடித்தமான உணவு குறித்து அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. தனக்கு பாகற்காய், பட்டாணி, கீரை தவிர எதுவென்றாலும் சரிதான் என அவர் சொன்னது மாணவிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பிடித்த இடம் எது என்ற கேள்விக்கு, தான் போகாத எல்லா இடங்களும் தனக்குப் பிடித்தவை எனக் கூறியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த விடியோ அவரது ஆதரவாளர்களால் அதிகமும் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.