காதலனுக்காக 2 தங்கைகளைக் கொன்ற அக்கா!

உத்தரப் பிரதேசத்தில் தனது துணையுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட 2 தங்கைகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
காதலனுக்காக 2 தங்கைகளைக் கொன்ற அக்கா!

உத்தரப் பிரதேசத்தில் தனது துணையுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட 2 தங்கைகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்ராய் பகுதியில் பகதூர்பூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சிறுமிகள் கொல்லப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் தனித்தனி அறையில் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். 

இதையடுத்து, சிறுமிகளின் சகோதரியான அஞ்சலியை(20) போலீஸார் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதையடுத்து, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஒருகட்டத்தில் அஞ்சலி உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் கொன்றதற்கான காரணத்தைக் கூறும்போது அனைவரையும் அதிர்க்குள்ளாக்கியது. 

அஞ்சலி வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில், தன் துணையுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனைக் கண்ட இரண்டு தங்கைகள் தன் பெற்றோரிடம் சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சுர்பி(7), ரோஷ்னி(4) ஆகிய இருவரையும் மண்வெட்டியால் தாக்கிக் கொன்று தனித்தனி அறையில் அடைத்துள்ளார். 

அத்துடன் கொலைக்கான தடத்தையும் அவர் அழிக்க முயன்றுள்ளார். கொலை செய்யப் பயன்படுத்திய மண்வெட்டி, கரை படிந்த துணி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த இரட்டை கொலையில் வேறு ஒரு நபருக்கும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்த அஞ்சலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com